நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் கழிவு : 30 நாட்களுள் செலுத்த தவறினால் மேலதிக அறவீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 5, 2023

நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் கழிவு : 30 நாட்களுள் செலுத்த தவறினால் மேலதிக அறவீடு

நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் பாவனையாளர்களுக்கு 1.5 வீத கழிவு வழங்கப்படவுள்ளது. 

கட்டணப் பட்டியல் கிடைத்து முப்பது நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தத் தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5 வீதம் அறிவிடப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நிறுவனத்தின் படிமுறைக்கமையவே நீர்க் கட்டணம் அறிவிடப்படுவதாக அறிவித்துள்ளது.

கட்டண அறவீடு தொடர்பில் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்தம் உபயோகப்படுத்தும் நீரின் அளவின் அடிப்படையில் நீர்க் கட்டணம் அறவிடப்படுகிறது. கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கட்டணக் கழிவு வழங்கப்படுகின்றது. முப்பது நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தத் தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5. வீதம் அறிவிடப்படும்.

அரச நிறுவனங்களின் நீர் விநியோகத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை செலுத்துவதற்கு மேலதிகமாக 90 நாட்கள் வழங்கப்படும்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, அதிக செலவீனத்தில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரையே பாவனையாளர்களுக்கு வழங்குகிறது.

இதற்கான கட்டணம்கூட நியாயமான அடிப்படையிலேயே அறிவிடப்படுகின்றது. அத்துடன் சேவைகளை தடையின்றி வழங்க கட்டணங்களை முறையாக செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment