ஐ.நா. உலக உணவு செயற்திட்ட நிர்வாக இயக்குனர் இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம் - பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

ஐ.நா. உலக உணவு செயற்திட்ட நிர்வாக இயக்குனர் இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம் - பிரதமர் ரணில்

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு செயற்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் எதிர்வரும் மாதங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு செயற்திட்டத்தின் நிர்வாக இயக்குனரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது அழைப்பினை ஏற்று அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இது வரைக்காலமும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு செயற்திட்டம் இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளைப் பாராட்டுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டுவிட்டர் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ள பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment