கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விமானம் நடு வானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
அதன் பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment