உலகளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

உலகளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியது

உலக அளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உக்ரைனியப் போரால் 100 மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வன்முறை, பூசல், மனித உரிமை மீறல், துன்புறுத்துதல் ஆகிய காரணங்களால் மக்கள் வலுக்கட்டாயமாக வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டதாக அது குறிப்பிட்டது.

முதன்முறையாக அந்த எண்ணிக்கை மிக அதிகமாகப் பதிவாகியிருப்பதை அது சுட்டிக்காட்டியது.

ஆகவே உலகம் அதைக் கருத்திற் கொண்டு, பூசல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு கேட்டுக் கொண்டது.

எத்தியோப்பியா, புர்க்கினா பாசோ, மியன்மார், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கொங்கோ குடியரசு ஆகிய இடங்களில் ஏற்படும் வன்முறையால், கடந்த ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட 90 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து விட்டனர்.

பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரைனுக்குள்ளேயே 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் எல்லை கடந்து சென்றுவிட்டனர்.

No comments:

Post a Comment