ஸ்ரீ தலதா புனித பேழையை ஏந்திச் செல்லும் இறந்த நெதுன்கமுவே ராஜா கொம்பன் யானையை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அவர் இவ்வுத்தரவை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே யானையின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று அதற்காக குறித்த யானை இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment