மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை : களமிறங்குகிறார் விராட் கோஹ்லி - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை : களமிறங்குகிறார் விராட் கோஹ்லி

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நாளை கேப்டவுனில் ஆரம்பமாகவும் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த 2 ஆவது டெஸ்டில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி நாளை கேப்டவுனினில் ஆரம்பமாகிறது.

தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அங்கு 6 முறை டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ஒரு தொடர் சமநிலையில் முடிந்தது.

இதனால் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தென்னாபிரிக்காவில் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க முதுகுவலி காரணமாக கடந்த டெஸ்டில் விளையாடாத அணித் தலைவர் விராட் கோலி நாளைய போட்டியில் விளையாடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கோலி ஆடும் பட்சத்தில் விகாரி அணியில் இருந்து நீக்கப்படுவார்.

கோஹ்லியின் திறன் தற்போது சிறிது காலமாக விவாதப் பொருளாக உள்ளது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சதம் பெறத் தவறிவிட்டார்.

இது பலர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் நாளைய டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு "யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment