திருகோணமலை எண்ணெய்க் குத உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

திருகோணமலை எண்ணெய்க் குத உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (10) சீனக்குடா எண்ணெய் தள பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மட்டக்களப்பு சீனக்குடா பிரதான வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை எண்ணெய்க்குத வளாகத்துக்கு எதிரே, இதற்கான ஒப்பந்தம் ஜனவரி 6 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதனை கண்டித்தே இக்கவனயீர்ப்பு இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, இம்ரான் மஹ்ரூப் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த 99 குதங்களில் 85 குதங்கள் இப்போது இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. "எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்யும் தேசத்துரோக ஒப்பந்தத்தை இரத்துச் செய்" உள்ளிட்ட விடயங்களை கூறி கோசங்களை எழுப்பினர்.

எனினும் இந்த உடன்படிக்கை நாட்டின் பல துறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் 877 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் நெறிமுறையற்றதாகவும், சட்டவிரோத மாகவும் விற்பனை செய்துள்ளதாகவும், இது முந்தைய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை விட பாரிய துரோகம் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து அமைச்சர்கள் அமைச்சரவைக்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ தெரிவிக்கவில்லை. இந்த உடன்படிக்கையானது தேசிய பாதுகாப்புக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது எனவும் இதன் போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

(ஹஸ்பர்)

No comments:

Post a Comment