டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக 18 பேரை ஏமாற்றிய பொலன்னறுவை கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இதுவரை 18 பேரிடம் டுபாயில் வேலைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்து 2.8 மில்லியன் ரூபா வரை பெற்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது,

வெலிகமவில் பிறந்த குறித்த நபர், பாணந்துறையைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்து தற்போது கதுருவெல பிரதேசத்தில் வசிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், வெலிகம, அக்குரஸ்ஸ, பாணந்துறை, குருநாகல், எஹலியகொட, மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வந்ததுடன், மாணிக்கக்கல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்துள்ளார். இவரால், பாதிக்கப்பட்ட 18 பேர் வெலிகம பொலிஸ் நிலைளத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment