ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 16,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
டுபாய் எக்ஸ்போ 2020 ஆம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலாம் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளையும் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதற்காக விமான நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையம் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பது என்ற இரட்டை சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது என்றார்.
கொவிட்க்கு எதிரான பாரிய தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் உலகின் சிறந்த பத்து நாடுகளில் இலங்கையும் இருப்பதாக கூறினார்.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இலங்கை கவனம் செலுத்தும் என கூறியதோடு தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க ஒரு மாதத்திற்கு குறைந்தது 150,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment