பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 26, 2021

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2001ஆம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ள இவர், பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா என்பவரின் இளைய மகன்.

தனுஷ் நாயாகனாக நடித்த திருடா திருடி, விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்கள் இவர் நடித்த படங்களில் சில.

2013 இல் இலங்கை வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் இலங்கை பயணிக்க இருந்தனர்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ் நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என்று தமிழ் நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார்.

அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.

No comments:

Post a Comment