பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் நிவாரணப் பொதி : தொலைபேசியூடாக அழைத்து நுகர்வோர் 48 மணித்தியாலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் நிவாரணப் பொதி : தொலைபேசியூடாக அழைத்து நுகர்வோர் 48 மணித்தியாலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நிவாரண பொதி விநியோக நடமாடும் சேவை நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும். ஏனைய விற்பனை நிலையங்களை காட்டிலும் சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் பொருட்கள் விநியோக கட்டணம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் 125 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் சுபிரி சம்பா அரிசி 10 கிலோ கிராமும், 125 ரூபாவிற்கு விற்பனை செயயப்படும் சிவப்பு சீனி இரண்டு கிரோ கிராமும், 140 ரூபா பெறுமதியான தாய்லாந்து நெத்தலி 200 கிராமும், 400 கிராம் நூடில்ஸ் பெக்கட் ஒன்றும், 400 கிராம் உப்பு பெக்கட் ஒன்றும், வாசனை மற்றும் ஆடை கழுவும் சவர்க்காரம் இரண்டும், 95 ரூபா பெறுமதியிலான பப்படம் ஒரு பெக்கட்டும் அந்த நிவாரண பொதிக்குள் உள்ளடக்கப்படும்.

நிவாரண பொதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள 8 அத்தியாவசியப் பொருட்களை ஏனைய விற்பனை நிலையங்களில் நுகர்வோர் 2893 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும். சதொச விற்பனை நிலையத்தில் இந்த நிவாரண பொதியை பெற்றுக் கொள்வதால் நுகர்வோர் சுமார் 800 ரூபா வரை சேமிக்க முடியும்.

சதொச நிறுவனம் நாளை முதல் இந்த அத்தியாவசிய நிவாரணப் பொதியை நடமாடும் சேவை ஊடாக விநியோகிக்க தீர்மானித்துள்ளது.1998 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அழைத்து நுகர்வோர் 48 மணித்தியாலத்திற்குள் நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும். சேவை கட்டணமாக 150 ரூபா அறவிடக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment