தென்னாபிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அறிவிப்பையடுத்து எச்சரிக்கையுடன் இருக்கும் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

தென்னாபிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அறிவிப்பையடுத்து எச்சரிக்கையுடன் இருக்கும் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்கள்

தென்னாபிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் திரிபொன்று கண்டறியப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

B.1.1.529 என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பினால் கிரேக்க எழுத்து (அல்பா, பீட்டா, டெல்டா என்பது போல்) பெயரிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள கொவிட் வைரஸ் தெடர்பில் அந்நாட்டு தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சா் ஜோ பாஹ்லா அதனை அறிவித்துள்ளார்.

அதிக வீரியமாக தன்னை பெருக்கிக் கொள்ளும் இந்த உருமாறிய கொவிட் வைரஸ் மிக ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் விமான நிலையங்கள் எச்சரிக்கை நிலையை பேணி வருகின்றன.

குறித்த வைரஸ் தொற்று காரணமாக தென்னாபிரிக்காவில் டிசம்பா் அல்லது ஜனவரியில் கொரோனா 4ஆம் அலை தாக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கெளடெங் போன்ற மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென் ஆப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த் தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம். 

தென் ஆப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு கவுன்சிலும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘வெள்ளிக்கிழமை (26) உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம். 

தென்னாபிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டு விட்டதால், இதன் தோற்றம் தென்னாபிரிக்காதான் என தீா்மானித்து விட முடியாது. கொரோனா வைரஸின் மரபணுவில் 30 க்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது’’ என்றாா்.

ஏற்கெனவே கடந்த வாரம் லண்டனின் இம்பீரியல் கல்லூரியை சோ்ந்த தீநுண்மியியல் நிபுணா் டாம் பீகாக் என்பவா், உருமாறிய புதிய வகை வைரஸ் குறித்து விளக்கமாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தாா். பிரிட்டனில் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை என்றாலும், இதன் மீது விஞ்ஞானிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டதை மேற்கோள்காட்டி, பிரிட்டனுக்கு அவா் வியாழக்கிழமை ட்விட்டரில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தாா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் வரை சராசரியாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிவந்த நிலையில், புதன்கிழமை 1,200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா்.

ஆபிரிக்க கண்டத்திலேயே உச்சபட்சமாக இங்கு 9 ஆயிரம் போ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment