“மைக்ரோசிப்” பற்றாக்குறை : கார், செல்போன் தயாரிப்பில் பெரும் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

“மைக்ரோசிப்” பற்றாக்குறை : கார், செல்போன் தயாரிப்பில் பெரும் பாதிப்பு

உலகெங்கும் தற்போது நிலவி வரும் மைக்ரோசிப் பற்றாக்குறை காரணமாக கார், செல்போன் தயாரிப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கார்கள் முதல் செல்போன்கள் வரை அனைத்து பொருட்களின் இயக்கத்திலும் ‘மைக்ரோசிப்’ எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பங்காற்றுகிறது.

அதிலும் குறிப்பாக தாய்வான், சீனா, கொங்கொங் ஆகிய நாடுகள் மைக்ரோசிப்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கின் காரணமாகவும், தாய்வானில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கடந்த ஓராண்டாக மைக்ரோசிப் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மைக்ரோசிப்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் இலாபம் வெகுவாக சரிந்துள்ளது.

மைக்ரோசிப் உற்பத்தியில் முன்னணியில் உள்ள குவால்காம், இன்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 4 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மைக்ரோசிப்களின் பற்றாக்குறை தொடரும் என்று கூறியுள்ளன.

சில வகையான மைக்ரோசிப்களுக்கு அடுத்த 2 ஆண்டுகள் வரை தட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 4 - ஜி ரக செல்போன்களுக்குள் பொருத்தப்படும் மைக்ரோசிப்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவற்றின் உற்பத்தியும் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment