ருவாண்டா டுட்ஸி இனப் படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

ருவாண்டா டுட்ஸி இனப் படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு

1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப் படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில் நேற்று காலமானார்.

80 வயதான தியோன்ஸ்டே பகோசோரா, இனப் படுகொலை காலகட்டத்தில் ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த நபராக இருந்தார்.

பாகோசோரா 1993 இல் ருவாண்டா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவர் 1994 ஜூலையில் ருவாண்டாவை விட்டு வெளியேறும் வரை இந்த சக்தி வாய்ந்த நிலையில் தொடர்ந்து செயல்பட்டார்.

இனப் படுகொலைக்காக அவர் 1996 இல் கேமரூனில் கைது செய்யப்பட்டடார். இனப் படுகொலை செய்ய சதி செய்ததாக பாகோசோரா மீது குற்றமும் சாட்டப்பட்டு, ஐக்கிய நாடுகள் ஆதரவுடைய குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் இந்த உத்தரவு பின்னர் 35 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இனப் படுகொலையின் போது சுமார் 800,000 மக்கள், பெரும்பாலும் டுட்ஸி இனத்தைச் சேர்ந்தவர்கள், 100 நாட்களில் கொல்லப்பட்டனர்.

ருவாண்டாவின் அப்போதைய ஜனாதிபதி ஜுவெனல் ஹபரிமனாவை ஏற்றிச் சென்ற விமானம் 1994.04.06 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த சம்பவத்தலிருந்து படுகொலைகள் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment