லாப் நிறுவனம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கா விட்டால், வைப்புப் பணத்தை மீளப் பெற்றுத் தாருங்கள் : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு அமைச்சர் பந்துலவுக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

லாப் நிறுவனம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கா விட்டால், வைப்புப் பணத்தை மீளப் பெற்றுத் தாருங்கள் : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

லாப் எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கா விட்டால் நுகர்வோர் அந்த கேஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்பட்ட வைப்பு பணத்தை மீள செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரன்ஜித் விதானகே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லாப் கேஸ் நிறுவனத்தின் நடவடிக்கையால் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு நுகர்வோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த நிறுவனம் தொடர்ந்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்வதில்லை என்றால், நுகர்வோரினால் பணம் வைப்பிலிட்டு பெற்றுக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் நிறுவனத்துக்கு பெற்றுக் கொண்டு, சிலிண்டருக்காக நுகர்வோர் வைப்பிலிட்ட பணத்தை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த நிறுவனத்துக்கு அறிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போதைய இக்கட்டான நிலைமையில் நாட்டில் இருக்கும் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மீண்டும் பணம் வைப்பிலிட்டு, வேறு நிறுவனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்ய முடியாது என்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

No comments:

Post a Comment