இலங்கையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு - "மக்கள் மனதில் எடுக்கவில்லை" என்கிறார் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

இலங்கையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு - "மக்கள் மனதில் எடுக்கவில்லை" என்கிறார் கெஹெலிய

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 06ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 ஜனாதிபதி செயலணி கூட்டத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஊரடங்கை தங்களது மனதுக்கு எடுக்காத நிலைமையை எடுக்காத நிலைமைய அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இவ்வூரடங்கு உத்தரவை பயனுள்ளதாக அமைக்கும் பொருட்டு, தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், வீட்டிலிருந்து பணியாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 தொற்று மற்றும் மரணங்களின் அதிகரிப்பு காரணமாக, பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையான 10 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்ட உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment