20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மன்னிக்கவுள்ளோம் : ரவுப் ஹக்கீம் - News View

Breaking

Sunday, August 8, 2021

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மன்னிக்கவுள்ளோம் : ரவுப் ஹக்கீம்

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கோரியுள்ளமையால், அவர்களை மன்னிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இவ்விடயம் தொடர்பில் அரசியல் உச்சபீடம் ஏற்கனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதால் மன்னிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விவகாரம் நிறைவடைந்து விட்டது.

அவர்களுடைய வேறு திறமைகளைக் கருத்திற் கொண்டு கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. அதற்கான பொறுப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment