மறு அறிவித்தல் வரை ஓய்வூதிய திணைக்களம் வர வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது உக்கிரமடைந்துள்ள கொவிட்-19 தொற்று அவசர நிலைய காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி. டயஸ் விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஓய்வூதியத்தை செயற்படுத்துவது தொடர்பாக நேர்முகத் தெரிவிற்கு அழைப்பது மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திணைக்களத்திற்கு வருவது நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திணைக்களத்தினால் பெற வேண்டிய சேவைகள் ஏதேனும் இருக்குமாயின், 1970 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment