உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி - முற்பதிவின் அடிப்படையில் திட்டம் ஆரம்பம் - SMS மூலம் திகதி, இடம் அறிவிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி - முற்பதிவின் அடிப்படையில் திட்டம் ஆரம்பம் - SMS மூலம் திகதி, இடம் அறிவிக்கப்படும்

உயர் கல்வி மற்றும் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முற்பதிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இன்று (02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவைத் தொடர்ந்து இரு நாட்களில் உரிய தொலைபேசி இலக்கத்திற்கு SMS மூலம் உரிய திகதி மற்றும் இடம் தொடர்பான விடயங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment