தென் கொரியாவின் பேச்சு வழக்கை பின்பற்றுவோரை எச்சரித்தது வட கொரியா - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

தென் கொரியாவின் பேச்சு வழக்கை பின்பற்றுவோரை எச்சரித்தது வட கொரியா

தென் கொரிய பேச்சு வழக்கை பின்பற்றும் வட கொரிய இளைஞர்களை எச்சரித்திருக்கும் அந்நாட்டு அரச ஊடகம், வட கொரியாவின் நிலையான பேச்சு வழக்கை பேசும்படி வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று தென் கொரியாவின் ஆடை அலங்காரங்கள், முடிவைக்கும் பாணி மற்றும் இசையை பின்பற்றுவதற்கு எதிராக வட கொரிய உத்தியோகபூர்வ பத்திரிகை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எந்த வகையான வெளிநாட்டு செல்வாக்குகளையும் முற்றாக தடுப்பது மற்றும் அதற்கு எதிராக கடும் தண்டனைகள் வழங்குவது தொடர்பில் வட கொரியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் மரண தண்டனை கூட வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

தென் கொரிய பொப் காலாசாரத்தை பின்பற்றுவது தலைமுறைகளுக்கு ஆபத்தைக் கொண்டது என்று ரொடொங் சின்பும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவில் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்து பெரும் அளவான தகவல் பரப்பும் வகைமுறைகளை வைத்திருப்பவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவைகளை பார்த்தால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment