'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' : ஊரடங்கை பொருட்படுத்தாது கூடும் மக்கள் : கின்னஸ் சாதனை படைக்குமா? - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' : ஊரடங்கை பொருட்படுத்தாது கூடும் மக்கள் : கின்னஸ் சாதனை படைக்குமா?

பங்களாதேஷில், 51 சென்டி மீட்டர், உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோ மீற்றர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. 

அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்டி மீட்டர் நீளம் மற்றும் 26 கிலோ கிராம் (57 பவுண்கள்) மட்டுமே எடையுள்ளது.

இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்டி மீட்டர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014 ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 சென்டி மீட்டர், என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் காரணமாக நாடு தழுவிய போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இருந்தாலும் டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோ மீற்றர் (19 மைல்) தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள பண்ணைக்கு மக்கள் ரிக்‌ஷாக்களில் திரண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad