இலங்கையில் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! - News View

Breaking

Monday, July 26, 2021

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

(எம்.மனோசித்ரா)

தென்மேற்கு பருவ மழை காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்தோடு கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு அதிக மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment