600 மீற்றர் உயரத்தில் பள்ளத்தாக்கைக் கயிற்றைக் கட்டிக் கடந்த நால்வர் : உலக சாதனையும் படைத்தனர் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

600 மீற்றர் உயரத்தில் பள்ளத்தாக்கைக் கயிற்றைக் கட்டிக் கடந்த நால்வர் : உலக சாதனையும் படைத்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இப்படி ஒரு கவின்மிகு இடத்தைக் கண்டால் என்ன தோன்றும்?

நமக்குப் படம் எடுக்க வேண்டும், பாட வேண்டும், குதிக்க வேண்டும், ரசிக்க வேண்டும் இப்படியெல்லாம் தோன்றும்.

ஆனால், அங்கு கயிற்றைக் கட்டி, அதைக் கடக்க வேண்டும் என்று தோன்றுமா?

600 மீற்றர் உயரம், 2.1 கிலோ மீற்றர் தூரம், கீழே பள்ளத்தாக்கு, கயிற்றைக் கட்டி கடக்க முடிவு செய்தனர் நால்வர். உலக சாதனையும் படைத்தனர்.

சுவிட்ஸர்லந்தில் (Switzerland) உள்ள ஆர்ட்டிக் (Arctic) பள்ளத்தாக்கில் சாதனை படைக்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த வித்தைக் காட்டும் நால்வர், அந்தச் சாகசத்தில் ஈடுபட்டனர். அதைக் காட்டும் காணொளியில், ஆடவர் ஒருவர், வெறுங்காலில், கயிற்றை மெதுவாகக் கடப்பது தெரிகிறது.

பள்ளத்தாக்கில் இரு பக்கங்களிலும் உள்ள சிகரங்களைக் கயிற்று வழியாக இணைப்பதற்கு 2 நாள்கள் எடுத்ததாம்.

தற்போது ஆர்ட்டிக் பக்கத்தில், 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கும் நிலையில், அது சாகசம் புரிவதற்கு அழகிய இடமாகக் கருதப்பட்டதாக சாகசக்காரர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad