இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் இன்று (14.06.2021) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment