யாழ். மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

யாழ். மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

எம்.மனோசித்ரா

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய, இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16,400,000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment