மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை நிலையங்களை அவசரமாக இஸ்தாபியுங்கள் : ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை நிலையங்களை அவசரமாக இஸ்தாபியுங்கள் : ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர்

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை நிலையங்களை அவசரமாக இஸ்தாபித்துத் தருமாறு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட்-19 தொற்றாளர்களுடைய எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

மேலும், கோவிட்-19 தொற்றுக்குள்ளாகும் பெண்கள், சிறுவர்கள் உள ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவதுடன், எமது மாவட்டத்தை விட்டு தூர இடங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்கள் பெரிதும் அச்சப்படுவதுடன், உள ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை நிலையங்களை அவசரமாக இஸ்தாபித்துத் தருமாறு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோரிடம் தனது வேண்டுகோளை இன்று முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment