கட்டண அதிகரிப்பில்லை , பஸ் உரிமையாளர்களுக்கு விசேட சலுகைப்பொதி அறிமுகம் என்கிறார் அமைச்சர் திலும் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

கட்டண அதிகரிப்பில்லை , பஸ் உரிமையாளர்களுக்கு விசேட சலுகைப்பொதி அறிமுகம் என்கிறார் அமைச்சர் திலும்

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்களுக்கு விஷேட சலுகைப் பொதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எக்காரணத்திற்காகவும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மேற்படி சலுகைப் பொதியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் இந்த வாரத்தில் பஸ் உரிமையாளர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் பயணிகள் போக்குவரத்துத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment