ஜனாதிபதி செயலணி தோல்விடைந்துள்ளது, அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது, கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

ஜனாதிபதி செயலணி தோல்விடைந்துள்ளது, அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது, கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் ஜனாதிபதி செயலணி தோல்விடைந்துள்ளது என்பதை பல விடயங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொவிட் விவகாரத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது. கொவிட் தடுப்பு செயற்திட்டத்தை பாராளுமன்றம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வைத்திய விசேட நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தடுப்பு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்19 வைரஸ் கட்டுப்பாடு ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது என்பதை பல விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கொவிட் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. கொவிட்19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.

கொவிட்19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் கிராமிய மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஒன்றினைத்து கட்சி ஒருமித்த கொள்கை வகுக்கப்பட வேண்டும். 

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் திட்டத்தில் அரசியல் கட்சி பேதங்களை திறந்து அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்களில் விசேட துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தில் இருந்து கொவிட்19 வைரஸ் உருமாறிய டெல்டா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அபாயகரமான நிலையாகவே கருத வேண்டும். நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய செயற்திட்டங்களை விரைவாக வகுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment