முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் (13) கைது செய்துள்ளார்கள்.
வாகனங்களில் மீன்களை ஏற்றிச் செல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த வானமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பயண தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டடுள்ளதால் முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் மதுபான போத்தல்கள் 5000 - 10000 ரூபா வரையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment