மத்திய வியட்நாமிலுள்ள என்ஹேயில் மகாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 மணிக்குப் பின்னர் மாகாணத்தின் வின் நகரில் உள்ள மூன்று மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வீடு வணிக நடவடிக்கையுடன் இணைந்த ஒரு தனியார் குடியிருப்பு ஆகும்.
முதலாம் மாடியில் கொரோனா தொற்று காரணமாக சமீபத்தில் மூடப்பட்ட ஒரு நேரடி இசைக்கூடம் மற்றும் மூன்றாவது மாடியில் வாடகை அறைகளும் இருந்துள்ளன.
வீட்டில் பரவிய தீயை அணைக்க ஏழு சிறப்பு வாகனங்கள் மற்றும் கிட்டத்தட்ட 100 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர், ஆனால் உள்ளே சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
தீவிபத்து குறித்த மேலதிக விசாரணை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment