சிரியாவில் வைத்தியசாலை மீது பயங்கரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 27 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

சிரியாவில் வைத்தியசாலை மீது பயங்கரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 27 பேர் படுகாயம்

சிரியாவிலுள்ள தனியார் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் இடம்பெற்றுவரும் நீண்ட கால போரால் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் பலர் இலட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில், அந்நாட்டின் வைத்தியசாலைகள் மீது 400 க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் மீது குர்திஷ் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் நோயாளிகள் உட்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர, 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment