எம்.எம்.சில்வெஸ்டர்
உயிர்களை பறிக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டில் காணப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட்19 தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மகப்பேற்ற மருத்துவ மற்றும் நரம்பியல் விஷேட வைத்திய நிபுணர்களின் விஞ்ஞான பீடத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் தற்போது பாவனையிலுள்ள ஏதேனுமொரு தடுப்பூசியை வழங்க முடியும் எனவும், இதனை தேசிய தேவையாகக் கருதி அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து சுகாதார சேவை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளபோதிலும், அதற்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 200 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், சிலர் அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பீடிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment