கொழும்பில் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியினுள் பிறந்த குழந்தை - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

கொழும்பில் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியினுள் பிறந்த குழந்தை

சுவசெரிய அம்பியூலன்ஸுக்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் களுபோவில வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் களுபோவில வைத்தியசாலை தாதி ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை 1990 சுவசெரிய சேவையில் பணியாற்றும் ரவிந்து என்பவர் அம்பியூலன்ஸுக்கு வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வந்தார். 

குழந்தை தொடர்பில் அவரிடம் வினவிய போது, “மிஸ், தற்போதுதான் இந்த குழந்தை அம்பியூலன்ஸுக்குள் பிரசவித்தது. நாங்கள் பிரசவத்தை செய்தோம். அந்தக் குழந்தையே இது. குழந்தையின் தாய் உள்ளே உள்ளார். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்தது. தனக்கு பிரசவவலி வந்துவிட்டதாக பெண் ஒருவர் கூறினார். உடனடியாக சென்று பார்க்கும் போது குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தார். அம்பியூலன்ஸில் ஏற்றியதும் குழந்தை பிறந்துவிட்டது. நான் தான் குழந்தையை வெளியே எடுத்தேன் என ரவிந்து குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்19 வைரஸ் பரவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து சிந்திக்காமல் குழந்தை பிரசவத்தை செய்த சேவையை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் பணியை பாராட்ட வேண்டியது எமது கடமை” என தாதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad