(எம்.மனோசித்ரா)
நாட்டின் மூலச்சட்டத்திற்கு முரணான வகையிலேயே அரசாங்கம் போக்குவரத்து உட்பட ஏனைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டை சவாலுக்கு உற்படுத்தி உயர் நீதின்றில் அடிப்படை உரிமைகள் மனுத்தாக்கால் செய்யப்பட்டால் அனைத்து கட்டுப்பாடுகளையும் உடன் இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறுகையில், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை பிரயோகிக்காது சட்டத்திற்கு அப்பால் சென்று கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது.
இது நாட்டின் மூலச்சட்டத்திற்கு முரணானதாகும். சட்டத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றில் சவாலுக்கு உட்பத்த முடியும். அவ்வாறு யாரேனும் ஒரு குடிமகன் செய்தால் அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்ள கூடிய நிலையே அரசாங்கத்திற்கு ஏற்படும்.
பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம் 1947 இல் நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த முடியும். ஆனால் 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்து காலத்துவத்தில் பிரயோகிக்கப்பட்ட சட்டமே தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சுயாதீன நாடு என்பதையும் அரசாங்கம் மறந்துள்ளது என அவர் குறிப்பட்டார்.
No comments:
Post a Comment