இலங்கைக்கு 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது உலக வங்கி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

இலங்கைக்கு 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது உலக வங்கி

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.

உலக வங்கி, இலங்கைக்கு 80.5 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் உலக வங்கியின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அவசர நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சுகாதார கட்டமைப்புகளை தயார்படுத்தும் செயற்திட்டங்களுக்குமென உலக வங்கியால் வழங்கப்படும் இரண்டாவது நிதியுதவி இது என்றும் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக வழங்கப்படும் மேற்படி நிதியுதவி உலக வங்கியினால் தடுப்பூசி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைமைக்கிணங்க தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அதனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கை அலுசலகம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment