இலங்கையில் தற்போது வசிக்கும் பிரஜைகளின் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் 2021 மே 11 இலிருந்து ஜூலை 09 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் 60 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று நோய் காரணமாக குறைந்தளவிலான உத்தியோகத்தர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், அவசர மற்றும் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பலத்தரமுல்ல பிரதான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவம், மட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கண்டி, வவுனியா, மாத்தறை, குருணாகல் பிராந்திய அலுவலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக் கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசாக்களை கொண்டிருப்பவர்கள், வீசாக்களை மேலொப்பமிடுவதற்கு,
eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்திற்கு சென்று கட்டணத்தை செலுத்தி, Onine வீசாக்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் நாட்டிலிரந்து வெளியேறுவதற்கு உத்தேசிக்கும் நிலையில், உரிய வீசாக் கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற முடியும்.
2021 ஜூலை 09ஆம் திகதிக்கு முன்னர் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு வந்து உரிய வீசா கட்டணத்தை செலுத்தி வீசாகை கடவுச்சீட்டில் மேலொப்பமிட்டுக் கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு
immigration.gov.lk
இது தொடர்பில் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள மும்மொழியிலான அறிவித்தல் வருமாறு
No comments:
Post a Comment