கொழும்பு துறைமுக நகரம் என்பது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொன்னான வாய்ப்பு என்று மஹா சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை திருத்துவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும். இந்தச் சட்டமூலம் பற்றி போலியான பயத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றக்கூடாது என்றும் மஹாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சட்டமூலம் நாட்டின் இறைமைக்கோ, ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக அமையவில்லை என்று அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டறுவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். நாட்டின் தனித்துவமும் ஆள்புல ஒருமைப்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
உள்நாட்டு கைத்தொழில்கள் மூலம் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இதற்காக வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்று தொழிலில்லா பிரச்சினைக்குத் தீர்வு காண இதன்மூலம் வாய்ப்பு கிடைக்குமென சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சீனாவின் காலணியாக மாறும் என்று கூறி மக்களை தவறாக திசைதிருப்ப சிலர் முயன்று வருகிறார்கள் என்றும் சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்த இந்த வேலைத்திட்டம் உதவும் என்றும் சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment