ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்றே சிந்தித்து செயற்படுகிறது - கலாநிதி ஜெகான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்றே சிந்தித்து செயற்படுகிறது - கலாநிதி ஜெகான் பெரேரா

ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் எனவும் அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது. அது எவ்வாறு என்றாலும் சமாதான சூழலுக்கு பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும்கூட எங்களுடைய நம்பிக்கையினை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 44 வது நினைவுநாள் நிகழ்வில் முன்னேற்றத்தின் வழிகளில் இணக்கம் காண்தல் எனும் தலைப்பில் ஆற்றிய நினைவுப் பேருரையில் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த நினைவு பேருரை நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த இரண்டு வருடங்களில் பல மாற்றங்கள் பல தீய நிகழ்வுகள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. நல்ல நோக்கத்தை அடைவதற்கு சமாதானத்தை முன்னெடுத்தல் என்பதுதான் இன்று இந்த உரையின் கருப்பொருளாக உள்ளது.

கடந்த நாட்களிலேயே இலங்கைக்கு பொருத்தமான ஆட்சிமுறை சமஸ்டி முறையிலான ஆட்சி முறைதான் சரியானது என குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் சுவிட்சலாந்து மாதிரியான சமஸ்டி முறையிலான ஒருமுறைதான் இலங்கைக்கு பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.

சிங்கள மக்களைப் பொருத்தவரை 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கென்று ஒரு சரித்திரம் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். அத்தோடு அவர்கள் கூறுகின்றார்கள் புத்தபெருமான் தங்களுக்கென்று இந்த தீவினை கொடுத்திருக்கிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.

பௌத்தத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு சிங்களவர்கள் கையிலே இந்தத் தீவிலே கொடுக்கப்பட்டு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. 

அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்திலே இந்தத் தீவிலே அவர்கள் மிகப் பெரும்பான்மையான எண்ணிக்கையாக இருந்திருந்தாலும் கூட அவர்கள் மன நிலையானது ஒரு சிறுபான்மை மக்களை போன்றதாகவே இருக்கின்றது. சிறுபான்மை மனநிலை உடைய சிங்களவர் பெரும்பான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. பிராந்தியத்தை எடுத்துப்பார்த்தால் அதில் அவர்கள் மிக சொற்ப சிறிதளவு எண்ணிக்கையை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

தமிழர்களை பார்க்கும் போது தமிழ் மக்கள் தாங்கள் ஒரு பிரதேசம் என்கின்ற மனநிலையோடு வாழுகிற மக்கள், வேறு பிரதேசங்களில் வாழுகின்ற மற்றவர்களை விட வித்தியாசமாக கலாச்சாரம், மொழி பின்னணி எல்லாவற்றிலுமே வேறாக இருக்கின்ற ஒரு பிறிதான தேசம் என்ற மனநிலையோடு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்த இரண்டு இனங்களுக்கு இடையில் இந்த தீவில் எப்படியாக நிர்வாகத்தை செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஒரு அதிகாரப் பகிர்வு முறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது முழுமை பெறாது இருந்தாலும் அது இன்னமும் சீர் செய்ய வேண்டியதாக இருந்தாலும் கூட அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அடிப்படையை அது கொடுத்திருந்தது அதனை சீர் செய்து சரி செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்.

ஆனால் இன்றைக்கு நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளல் நல்லதாக இருக்கும். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இன்றைக்கு அவர்களுடைய நிலைப்பாடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கின்றது. அப்படியான சிந்தனையிலேயே இருக்கின்ற வேளையில் தான் யுத்தம் முடிவடைந்த பிறகு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதிருந்த ஜனாதிபதி உடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய சிலர் தலையீடுகள் இருந்துகொண்டிருந்தன.

இந்தத் தடவை இப்படியான வித்தியாசமான சிந்தனையோடு ஆட்சி வந்த அரசாங்கம் தோற்றுப் போனது, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது/ அந்த தீர்மானத்தின் பிரகாரம் இன்னும் பதினெட்டு மாத காலத்திற்கு இலங்கை மீதான கடும் பார்வை கண்காணிப்பு இருக்கும் மேற்பார்வை ஒன்றும் இருக்கும்.

நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இலங்கை நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. செயலாளர் நாயகம் இலங்கைக்கு வந்தபோது இலங்கை ஜனாதிபதியோடு செய்த கூட்டறிக்கை முக்கியமான அம்சமாக இருந்தது..பொறுப்புக்கூறல் என்பது நிலைமாறுகால நீதி என்கின்ற ஒரு தத்துவம் இப்பொழுது காணப்படுகின்றது.

அதாவது ஒரு குழப்பமான சூழ்நிலையில் அல்லது ஒரு ஆயுத மோதலுக்குப் பிறகு வருகின்ற காலத்தில் இந்த நிலை நிலைமாறுகால நீதி அமுல்படுத்தப்படும் அதில் பிரதானமான தூண்கள் முதலாவது உண்மை இரண்டாவது நீதி, இழப்புகள் கொடுக்கப்படுதல், முன்னரைப் போல பல இழப்புக்களை ஏற்படாமைக்கான உத்தரவாதம் இந்த நான்கை எடுத்துக்கொண்டாலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஆகட்டும் அல்லது மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முன்னைய தீர்மானங்கள் ஆகட்டும் அவை பொறுப்புக்கூறல் என்கின்ற இரண்டாவது தூணைத்தான் கூடுதலாக வலியுறுத்தி இருக்கின்றனர். உண்மை உண்மையை கண்டறிதல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

சமாதானத்திற்கான சவால் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தினை நான் முன்னொரு காலத்தில் மன்னார் ஆயரின் இல்லத்தில் வைத்து நான் அதனை படித்திருந்தேன் அதன் நடுப்பக்கத்தில் அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் சேர்ந்து எழுதிய அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த நேரத்தில் சோவியத் ரஷ்யா எவ்வாறு தீய சக்தியாக உலகத்தில் இருக்கின்றதோ அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்து ஒரு பாரிய முறுகல் நிலை இருந்த பின்னணியிலே ஒரு அணு ஆயுத போர் ஏற்படுமா என்ற பீதி உலகம் முழுவதும் பிடித்திருந்த நிலையிலே அந்த பேராயர்கள் அந்தப் சமாதானத்துக்கான சவால்கள் என்ற நூலில் எழுதினார்கள்.

அதில் அவர்கள் சொன்ன பல விடயங்கள் என்னுடைய மனதை தொட்டு இருக்கின்றன. அதை அவர்கள் எழுதி ஐந்து வருட காலத்துக்குள்ளேயே உலகத்திலே தீய சக்தியாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை நாங்கள் அறிந்திருந்தோம்.

எனவே எமது நாட்டிலும் தமிழர்களாகிய நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது சமாதானத்திற்கான பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட எங்களுடைய நம்பிக்கைகளை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த வேலையிலும் நம்பிக்கை இழந்தவர்களாக நாங்கள் போய்விடக்கூடாது தொடர்ச்சியாக எங்களுடைய முனைப்பான முயற்சி இருக்க வேண்டும் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment