யாழ்ப்பாணத்தில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள் ஒரே நாளில் மீட்பு, சந்தேக நபரும் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

யாழ்ப்பாணத்தில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள் ஒரே நாளில் மீட்பு, சந்தேக நபரும் கைது

மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு நாளில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மருதனார்மடம் பகுதியில் நேற்றுமுன்தினம் முற்பகல் 11 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளை (வெகோ) வீதியில் நிறுத்தி வைத்த உரிமையாளர், கடைக்குச் சென்றுள்ளார்.

கடையிலிருந்து திரும்பிய போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸின் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று மாலை உரும்பிராயில் கைப்பற்றப்பட்டது. அதனைத் திருடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

28 வயதுடைய சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார். மோட்டார் சைக்கிளும் பொலிஸில் பாரப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad