யாழிழ் இளம் பெண்ணை வழிமறித்து மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்! - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

யாழிழ் இளம் பெண்ணை வழிமறித்து மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்!

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை வழிமறித்த இனந்தெரியாத குழுவொன்று, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆனைக்கோட்டை 3ஆம் கட்டையடியை சேர்ந்த (24 வயது) குறித்த யுவதி, யாழ். நகரிலுள்ள இரும்பகம் (ஹாட்வெயார்) ஒன்றில் பணிபுரிகிறார்.

இவர் நேற்றும் (வெள்ளிக்கிழமை) வழமைப்போன்று பணிபுரிந்து விட்டு மாலை 6.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஊடாக வீட்டுக்கு சென்ற வேளையில், ஆனைக்கோட்டையில் வழிமறிந்த சந்தேகநபர்கள் மூவர், அவருடன் முரண்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து யுவதியை தாக்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றபோது, அவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலிருந்து கைவிட்டு விட்டு, அருகிலிருந்த வீட்டிற்குள் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த குழு, மோட்டார் சைக்கிளுக்கு தீ மூட்டி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.

இதன் பின்னர் அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர். ஆனாலும் மோட்டார் சைக்கிளில் பகுதிகளவில் எரிந்து நாசமாகிவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த அவர்கள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment