குருணாகல் மாவட்டம் கனேவத்த பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர் பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் திடீரென கொவிட்-19 தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment