எட்டு பாகிஸ்தானியர்கள், 30 கிலோ கிராம் ஹெரோயினுடன் படகொன்றை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

எட்டு பாகிஸ்தானியர்கள், 30 கிலோ கிராம் ஹெரோயினுடன் படகொன்றை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை

சர்வதேச கடலோர எல்லைக் கோட்டுக்கு அருகில் எட்டு பாகிஸ்தான் நாட்டினருடன் ஒரு படகை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் வியாழக்கிழமை காலை ஒருங்கிணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 30 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சர்வதேச சந்தையில் சுமார் 150 கோடி இந்திய ரூபா எனவும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கூட்டுக் குழு அரேபிய கடலில் உள்ள சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே படகைக் கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment