(சர்ஜுன் லாபீர்)
நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு 20ஆவது சீர்திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்த 07 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளார்.
இச்சந்திப்பில் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் விவகாரம், சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை விவகாரம் போன்ற இன்னும் பல முக்கிய முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment