வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு பிக்குகள் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு பிக்குகள் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு பிக்குகள் உள்ளிட்ட 11 பேரை ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூவரசங்குளம், தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை ஏப்ரல் 9 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad