இன்று வெளிவருகிறது வர்த்தமானி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

இன்று வெளிவருகிறது வர்த்தமானி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாள் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாதென தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது.

அதேவேளை, சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்பளம் வழங்கக்கூடிய அளவுக்கேற்பவே வேலை நாட்கள் தீர்மானிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 15 நாட்களுக்கு மேல் வேலை வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனினும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதை ஏற்க முடியாதென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேலை நாட்களை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:

Post a Comment