முல்லைத்தீவில் சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சாதாரணதர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய நபரையே முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் பாடப்பரீட்சை நடைபெற்ற அன்று (02) முல்லைத்தீவு சிலாவத்தை பாடசாலை பரீட்சைகள் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணுக்கேணி மேற்கு முள்ளியவளையினை சேர்ந்த பரீட்சை எழுதும் மாணவனுக்கு பதிலாக நெடுங்கேணி வவுனியாவைச் சேர்ந்த 28 வயது நபர் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுத சென்றவேளை பரீட்சை நிலைய அதிகாரியால் அடையாளம் காணப்பட்டு முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் நேற்று (03) கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்
No comments:
Post a Comment