கிளிநொச்சியில் இரு வேறு இடங்களில் விடுதலைப் புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 17, 2021

கிளிநொச்சியில் இரு வேறு இடங்களில் விடுதலைப் புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வு

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இரு வேறு இடங்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களிலேயே இவ்வாறு அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வு பணிக்காக அனுமதி பெறப்பட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தனர்.

குறித்த இரு அகழ்வு பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் பணித்ததற்கமைவாக கைவிடப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறு அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment