வட மாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அநுராதபுர அலுவலகத்துக்கு மாற்றும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று காலை யாழ். மாவட்ட செயலக வாயிலை முடக்கி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் எடுத்த மேற்படி தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் தர்க்கம் இடம்பெற்றது. எனினும் தொடர்ந்தும் அவர்கள் மாவட்ட செயலக வாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment