மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 28, 2021

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான ஆலோசனைக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை 27.03.2021 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேன இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடத்தப்படுகின்ற நிலையில் இது 2021ஆம் ஆண்டுக்கான முதல் ஆலோசனை ஒருங்கிணைப்புக் கூட்டமாகும்.

இக்கூட்டத்தில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு ஆலோசனை குழு உறுப்பினர்களின் பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

இதன்போது மாவட்டத்தில் இடம்பெறுகின்ற போதைவஸ்து விநியோகம் விற்பனை அதன் நுகர்வு சிறுவர் துஸ்பிரயோகம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் இடர்கள் போன்ற செயல்பாடுகள் தொடர்பாக மாவட்டத்த்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் இதேவேளை பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.டி. பாலாறு மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment