Sputnik V தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க ரஷ்யா இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபயவிடம் ரஷ்யத் தூதுவர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க ரஷ்யா இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபயவிடம் ரஷ்யத் தூதுவர் தெரிவிப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான sputnik v vaccine தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

அதேவேளை வெளிநாடுகளிலிருந்து sputnik v vaccine ஊசி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் பய்ஷர் பயோ என்டெக் தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment